ஷா ஆலம், மே 19: மே 16 அன்று, உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக, செலாயாங்கில் உள்ள ஒரு மசாஜ் மையத்தை மூடுமாறு செலாயாங் நகராண்மை கழகம் உத்தரவிட்டது.
எம்.பி.எஸ் அழகு மற்றும் சுகாதார மைய துணைச் சட்டங்களின் (UUK) கீழ், அந்த மையத்திற்கு RM1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கூடுதலாக, அப்டவுன் ஸ்ரீ கோம்பாக்கில் நடந்த சோதனையில், அனுமதியின்றி ஒன்பது கடைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களைப் பயன்படுத்தி ரிஃப்ளெக்சாலஜி மற்றும் உடல் மசாஜ் சிகிச்சைகளை வழங்குவது கண்டறியப்பட்டது.
"அதைத் தொடர்ந்து, 27 லவுஞ்ச் நாற்காலிகள், எட்டு வணிக கூடாரங்கள், ஆறு மசாஜ் படுக்கைகள் மற்றும் 49 சிறிய நாற்காலிகள் உள்ளிட்ட வணிகப் பொருட்களை எம்.பி.எஸ் பறிமுதல் செய்தது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
"எம்பிஎஸ் நிர்வாகப் பகுதியில் ஒவ்வொரு வணிக நடவடிக்கையும் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து இருக்கும்," என்றும் தெரிவிக்கப்பட்டது.


