ஷா ஆலம், மே 15: கல்வி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக 15 பள்ளிகளுக்கும் தலா RM10,000 பண்டார் பாரு கிள்ளான் தொகுதி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு மொத்தாமாக RM150,000 ஒதுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை ஒரு பாதுகாப்பான மற்றும் உயர்தர கற்றல் சூழலை உருவாக்குவதற்கான தனது தரப்பின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெர்ங் ஃபீ தெரிவித்தார்.
"இந்த ஒதுக்கீடு பண்டார் பாரு கிள்ளானில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி அளவில் கல்வி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"இந்த முயற்சி கல்வி முறையில் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திலும் ஒரு முதலீடாகும்," என்று அவர் தெரிவித்தார்.
நன்கொடை ஒப்படைப்பு அமர்வு பண்டார் பாரு கிள்ளான் தொகுதியின் சமூக சேவை மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பள்ளிகள் எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை, சவால்கள் மற்றும் குறிப்பிட்ட தேவைகளைப் புரிந்துகொள்ள பள்ளி பிரதிநிதிகளுடன் குவா பெர்ங் ஒரு உரையாடலையும் நடத்தினார்.


