ஷா ஆலம், மே 16 - கம்போங் சுங்கை காயு ஆரா சமூக மண்டபத்தில் நாளை நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க கம்போங் சுங்கை காயு ஆரா பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசக சேவையோடு சிறு நோய்களுக்கு மருந்துகளும் வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த திட்டம் மாதம் 2,500 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் பி40 தரப்பு குடும்பங்களை இலக்காகக் கொண்டிருக்கும்.
ஆர்வமுள்ள குடியிருப்பாளர்கள் பதிவு செய்வதற்கு தங்கள் அடையாள அட்டைகளை கொண்டு வர வேண்டும். பரிசோதனையின்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறினார்.
பெட்டாலிங் ஜெயா அசுந்தா மருத்துவமனையுடன் இணைந்து மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டம் உள்ளூர் மக்களிடையே நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவுவதோடு சுகாதாரப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
எங்கள் கிராம மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட முன்வந்த அசுந்தா மருத்துவமனைக்கு கோடான கோடி நன்றிகள் என்று ஜமாலியா அப்பதிவில் கூறினார்.
மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் இப்பகுதியில் இந்த இலவச சுகாதாரப் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் http://tiny.


