SELANGOR

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்களுக்கு வெ.500 வரை வெகுமதி - தாமான் மேடான் தொகுதி வழங்குகிறது

15 மே 2025, 8:56 AM
எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய மாணவர்களுக்கு வெ.500 வரை வெகுமதி - தாமான் மேடான் தொகுதி வழங்குகிறது

ஷா ஆலம், மே 15 - தாமான் மேடான் தொகுதியின் சிறந்த மாணவர்

பரிசுத் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறந்த

அடைவுநிலையைப் பதிவு செய்த மாணவர்கள் வெ.500 வரை

வெகுமதியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளது.

இந்த வருடாந்திர நிகழ்வின் வாயிலாக எஸ்.பி.எம். தேர்வில் 4ஏ மற்றும்

அதற்கும் மேல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படுவர் என்று

தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கு பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களின் தந்தை

அல்லது தாய் தொகுதி வாக்காளர்களாக இருப்பது அவசியம் என அவர்

தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவுநிலையைப் பதிவு

செய்வதற்கு கடும் முயற்சி எடுத்துப் படித்த மாணவர்களை கௌரவிக்கும்

நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த பரிசுத் திட்டத்திற்கு இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி

வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பாரங்களை தாமான் மேடான் தொகுதி

ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மேல்

விபரங்களுக்கு 03-77739507 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகுதி உள்ள மாணவர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை தங்கள்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

- 2024 எஸ்.பி.எம். தேர்வு சான்றிதழ் நகல்

- மாணவரின் அடையாளக் கார்டு நகல்

- தந்தை மற்றும் தாயாரின் அடையாளக் கார்டு நகல்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.