SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் சிறந்த எஸ்.பி.எம். மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

14 மே 2025, 5:36 AM
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் சிறந்த எஸ்.பி.எம். மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், மே 14 - எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப்

பதிவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் வருடாந்திர நிகழ்வை கோத்தா

கெமுனிங் தொகுதி இவ்வாண்டும் நடத்தவிருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் 8ஏ மற்றும் அதற்கும் மேல்

தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு

விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கோத்தா கெமுனிங்

தொகுதி சேவை மையம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில்

கூறியுள்ளது.

இந்த சிறப்பு கௌரவிப்பு நிகழ்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின்

தந்தையும் தாயும் கோத்தா கெமுனிங் தொகுதி வாக்காளர்களாக இருப்பது

அவசியமாகும்.

தகுதி உள்ள மாணவர்கள் விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கியுஆர்.

குறியீட்டை ஸ்கேன் செய்து எஸ்.பி.எம். தேர்வு முடிவு நகல், மாணவர்

மற்றும் பெற்றோரின் அடையாளக் கார்டு நகல் ஆகியவற்றை

இணைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த சிறப்பு கௌரவிப்பு நிகழ்வுக்கான விண்ணப்பம் மே 14 முதல் ஜூன்

2 வரை திறந்திருக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.