SELANGOR

சிலாங்கூர் மறுசுழற்சி திட்டம் (SELKitar) 50க்கும் மேற்பட்ட வீடமைப்புகளில் மேற்கொள்ளப்படும்

13 மே 2025, 4:18 AM
சிலாங்கூர் மறுசுழற்சி திட்டம் (SELKitar) 50க்கும் மேற்பட்ட வீடமைப்புகளில் மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், மே 13: KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) செயல்படுத்தும் சிலாங்கூர் மறுசுழற்சி திட்டம் (SELKitar) இன்று 50க்கும் மேற்பட்ட வீடமைப்புகளில் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டம் சுபாங் ஜெயா மாநகராட்சி மற்றும் சிப்பாங் நகராண்மை கழகத்தில் உள்ள நிர்வாகப் பகுதிகளை உள்ளடக்கியது என அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ ராம்லி தாஹிர் கூறினார்.

“இந்தத் திட்டம் நெஸ்லே மலேசியாவுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று மறுசுழற்சி பொருட்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 50க்கும் மேற்பட்ட வீடமைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

“மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிக்கும் லாரி வாரத்திற்கு ஒரு முறை வரும். குடியிருப்பாளர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பிரித்து வைக்க வேண்டும்.

“மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைத் தவிர வேறு பொருட்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.