ஷா ஆலம், மே 6: எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி கோத்தா கெமுனிங் தொகுதி அலுவலகம் 200 பெறுநர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்ஸா நோய்த் தடுப்பூசிகளை வழங்குகிறது.
இதுவரைக்கும் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை எடுக்காத ஆறு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த சலுகை திறந்திருக்கும் என்றும், பின்தங்கிய (B40) குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்தார்.
இத்திட்டத்திற்கு பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்யலாம்: https://forms.gle/1aqZtTpPEwe9i1JN7
இந்த நிகழ்ச்சி கோத்தா கெமுனிங் தொகுதியின் சமூக சேவை மையத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளில் கடுமையான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்களைத் தடுக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த தடுப்பூசியை எடுக்க ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் RM80 முதல் RM100 வரை கட்டணம் வசூலிக்கின்றன.


