SELANGOR

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மலிவு விற்பனை

30 ஏப்ரல் 2025, 6:56 AM
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மலிவு விற்பனை
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப்ரல் 30: நாளை வரவிருக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு மலிவு விற்பனையை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) ஏற்பாடு செய்துள்ளது. அந்த விற்பனை ஷா ஆலமில் உள்ள ஏஹ்சான் மார்ட், செக்‌ஷன் 9இல் நாளை நடைபெறும்.

இந்த சிறப்பு விற்பனை காலை 8.30 முதல் நண்பகல் 1.00 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பிகேபிஎஸ் அதன் முகநூல் மூலம் தெரிவித்தது. அரிசி, முட்டை போன்ற பல்வேறு அடிப்படைப் பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதனால் இந்த விற்பனை மூலம் மக்கள் பயனடைவர்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 2 கிலோ சமையல் எண்ணெய் 10.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ் முகநூல் அல்லது http://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் மூலம் மலிவு விற்பனை நடைபெறும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.