SELANGOR

இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பிய உணவு விநியோகரிடம் காவல்துறை விசாரணை

25 ஏப்ரல் 2025, 5:19 AM
இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பிய உணவு விநியோகரிடம் காவல்துறை விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 25 - கடந்த சில நாட்களாக உணவு விநியோகச் செயலி மூலம் அவமதிக்கும் மற்றும் இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பிய உணவு விநியோக நபரை காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 298 மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233-இன் கீழ் விசாரிக்கப்படுவதாக, மத்திய செபெராங் பிறை மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

உணவு விநியோகம் செய்பவரின் செயல் கண்டிக்கத்தக்கது மற்றும் அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததது என்று ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டாகாங் முன்னதாகக் கூறியிருந்தார்.

உணவு விநியோக செயலி மூலம், உணவு விநியோகம் செய்யும் நபர் ஒருவர் அவமதிக்கும் மற்றும் இனவெறியை தூண்டும் வகையில் தகவல்களை அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் முன்னதாகக் காவல்துறயிடம் புகார் அளித்திருந்தார்.

--பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.