SELANGOR

300 பேருக்கு இலவச மதிய உணவை ஷா ஆலம் மாநகராட்சி விநியோகம்

23 ஏப்ரல் 2025, 5:58 AM
300 பேருக்கு இலவச மதிய உணவை ஷா ஆலம் மாநகராட்சி விநியோகம்

ஷா ஆலம், ஏப்ரல் 23 - நேற்று மேடன் செலாரா செக்‌ஷன் 7இல் 300 பேருக்கு இலவச மதிய உணவை ஷா ஆலம் மாநகராட்சி விநியோகித்தது.

இந்த முயற்சி, பின்தங்கிய மக்களின் சுமையைக் குறைக்கும் என்று தாம் நம்புவதாக ஷா ஆலம் மாநகராட்சி நிறுவன மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமட் கூறினார்.

"இந்த முயற்சி சமூகத்தினர் மதிய உணவை அனுபவிப்பதற்கான வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வர்த்தகர்களுக்கான விற்பனையையும் அதிகரிக்க முடியும்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, எம்பிஎஸ்ஏ செக்‌ஷன் 2 மற்றும் சுங்கை பூலோவில் இதே போன்ற திட்டங்களை செயல்படுத்தியது.

"இந்த இலவச உணவுத் திட்டம் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. அடுத்த கட்டம் ஷா ஆலமின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

"இலவச உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு உதவும் முயற்சியின் தொடர்ச்சியாக இலவச எரிபொருள் நிரப்பும் திட்டத்தையும் எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.