SELANGOR

சிகிஞ்சான் நெல் வயல் விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்

21 ஏப்ரல் 2025, 10:19 AM
சிகிஞ்சான் நெல் வயல் விழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள்

ஷா ஆலம், ஏப்ரல் 21: எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிகிஞ்சான் நெல் வயல் விழாவை முன்னிட்டு பசுமையான நெல் வயல்களைச் சுற்றி டிராம் மற்றும் மின்சார முச்சக்கர வண்டி மூலம் பயணிக்கும் வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைக்கும்.

இந்நிகழ்வில் உணவுத் திருவிழா, பலோங் சந்தை, மற்றும் மினி `wau` அலங்காரப் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் வருகையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன என்று சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் ,சுயி லிம் கூறினார்.

மேலும், சுகாதாரப் பரிசோதனை, 'புதையல் வேட்டை', சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தன்னார்வ நடவடிக்கைகள் மற்றும் பிரபல கலைஞர் ஐசாட் அம்டானின் நிகழ்ச்சி ஆகியவையும் அதில் அடங்கும்.

"இந்த நிகழ்ச்சியை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார். எனவே, இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் வருகையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. பொதுமக்கள் வந்து அதை அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.