SELANGOR

தாமான் மேடான் தொகுதி ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பில்  3,000 பேர் பங்கேற்பு

14 ஏப்ரல் 2025, 5:35 AM
தாமான் மேடான் தொகுதி ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பில்  3,000 பேர் பங்கேற்பு

தாமான் மேடான், ஏப்.14-  தாமான் மேடான் தொகுதி ஒருங்கிணைப்பாளர்   ஹலிமி அபு பாக்கர்  ஏற்பாட்டில் இங்குள்ள பிஜேஎஸ்1 டத்தாரான் அனாக் மூடா சதுக்கத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட ஜெம்பாக் ராயா திறந்த இல்ல உபசரிப்பில்  பல இனங்களைச் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் லெமாங், ரெண்டாங், சாத்தே  மற்றும் இனிப்புகள் போன்ற பல்வேறு பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்வு வெறும் விருந்து உபசரிப்பாக மட்டுமல்லாமல், நட்பை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் விளங்கியது.

டஜன் கணக்கான உணவுக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணம் கமழும் உணவு வகைகள் வருகையாளர்களுக்கு  உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தின

இந்த உபசரிப்பில் 15 வயதுக்குட்பட்ட சிறார்களும்  மறக்கப் படவில்லை. அவர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் நோன்புப் பெருநாள் பண அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இந்த விழா பெருநாளைக் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்த கூடிய  தளமாக விளங்குகிறது  என்று ஹலிமி அபு பாக்கர் கூறினார்.

இந்த உபசரிப்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள்  நடத்தப்பட்டன. இது அனைத்து வயதினருக்கும் மிகவும் அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமைந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.