SELANGOR

மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் - கல்வி அமைச்சு

28 மார்ச் 2025, 3:58 AM
மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் - கல்வி அமைச்சு

கோலாலம்பூர், மார்ச் 28 - தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் ஜாலூர் கெமிலாங் சின்னம் அணியப்படுவதை எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி கட்டம் கட்டமாகக் கல்வி அமைச்சு அமல்படுத்தும்.

அனைத்து அரசாங்கப் பள்ளிகள், அரசாங்க உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள் உட்பட மலேசிய ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே நாட்டுப்பற்றையும் நாட்டின் மீதான அன்பையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இளைய தலைமுறையினரிடையே நாட்டின் மீது அன்பை ஏற்படுத்தவும் நாட்டுப்பற்றை வளர்க்கவும் கல்வி கழகங்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப இம்முயற்சி அமைவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025/2026 கல்வி ஆண்டில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஜாலூர் கெமிலாங்'-இன் இரு சின்னங்களை இலவசமாக வழங்கவிருப்பதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர் சீருடையில் 'ஜாலூர் கெமிலாங் சின்னத்தை அணிவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சிறப்பு சுற்றறிக்கையையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.