பெட்டாலிங் ஜெயா மார்ச் 26 ;- பாஸ் கட்சியின் ஒரு பிரதமர் வேட்பாளராக பார்க்கப்பட்ட திராங்கானு மந்திரி புசார் சாம்சூரிக்கு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு காரணமாக அவர் கடந்த மாதம் கட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்க அறிவித்தார்.
சமீபத்தில் வைரலாகிய சுவரொட்டிகள் பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சாம்சூரி மொக்தாரை திராங்கானு மந்திரி புசார் பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது, செப்டம்பரில் நடக்க உள்ள கட்சி தேர்தலை முன்னிட்டு நடக்கும் உள்கட்சி மோதல்கள் என பார்க்கப்படுகிறது என்று ஒரு ஆய்வாளர் கூறுகிறார்.
பாஸ் கட்சி உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக ஒன்று திராங்கானு மந்திரி புசார் ஒரு தொழில்நுட்ப வல்லுநராகக் கருதப்படும் சாம்சூரியை ஆதரித்தும், மற்றொன்று தீவிர சமயவாதிகளின் உலமா பிரிவுமாகவும் இரண்டு அணிகளாக செயல் படுவதாக கூறப்படுகிறது.
சாம்சூரியின் சில முன்னெடுப்புகளில் பகிரங்கமாக உடன்படாத ஒரு பிரிவின் எதிர்ப்பை பாஸ் கட்சியின் உள் பூசல்களாக பார்க்க கூடாது என சிலர் வாதிட்டாலும் தலைமையில் இருந்து சாம்சூரி ஒதுங்கிக்கொள்ளவே அவர் கட்சி தேர்தலிலிருந்து ஒதுங்குவதாகவும் கணிக்கப்படுகிறது.
2019 முதல் பாஸ் துணைத் தலைவராக இருக்கும் சாம்சுரி, கட்சியின் உயர்மட்ட பதவியை ஏற்க தகுதியற்றவர் என்று கருத முடியாது, அவர் கட்சியின் இரண்டு பதவிகளில் ஒன்றுக்கு போட்டியிடலாம் என்ற ஊகத்தைத் தொடர்ந்து, சில பிரிவுகளை அவருக்கு அழுத்தத்தை கொடுத்து வருவதாக கட்சி உள் வட்டங்கள் தெரிவிக்கின்றன.


