SELANGOR

நோன்புப் பெருநாளின் போது  குப்பை அகற்றும் பணி சீராக மேற்கொள்ளப்படும்

25 மார்ச் 2025, 8:36 AM
நோன்புப் பெருநாளின் போது  குப்பை அகற்றும் பணி சீராக மேற்கொள்ளப்படும்

ஷா ஆலம், மார்ச் 25 - காஜாங் நகராண்மைக் கழகப் பகுதியில் துப்புரவு  மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நோன்புப் பெருநாள் காலம்  முழுவதும் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும்.

அதிக அளவு  திடக் கழிவுகள் சேரும்  என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில்  தனது தரப்பும் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெர்ஹாட்  கழிவு மேலாண்மை நிறுவனமும்  அதிக கவனம் செலுத்தும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் அதன் தலைவர் நஸ்லி முகமது தாயிப் கூறினார்.

பண்டிகைக் காலத்தில் அதிக  கழிவுகள் சேர்வதால்  ஏற்படக்கூடிய  விரும்பத்தகாத சூழ்நிலைகளை தவிர்க்க வீடுகள் அல்லது வளாகங்களில்  கழிவுகளை வீணாக்காமல் முறையாக நிர்வகிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அவர் சொன்னார்.

மேலும் முஸ்லிம் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நோன்புப் பெருநாள்  சுன்னத் தொழுகையை நிறைவேற்றுவதை எளிதாக்குவதற்காகப் பண்டிகையின் முதல் நாள்  இரவில் குப்பை சேகரிப்பு பணிகள் நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின் இரண்டாவது நாள் மற்றும்  அதற்கு அடுத்த நாளுக்குப் பிறகு குப்பை சேகரிப்பு அட்டவணைபடி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அவர் நேற்று நகராண்மைக் கழக மாதாந்திரக் கூட்டத்தில் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.