SELANGOR

ஜோம் ஷோப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களுக்கு RM160,000 ஒதுக்கீடு

14 மார்ச் 2025, 8:34 AM
ஜோம் ஷோப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களுக்கு RM160,000 ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14: 800 பெறுநர்களை உள்ளடக்கிய ஜோம் ஷோப்பிங் ஐடில்பித்ரி வவுச்சர்களை விநியோகிப்பதற்காக ஶ்ரீ செத்தியா தொகுதிக்கு மொத்தம் RM160,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த சனிக்கிழமை தொடங்கி தகுதியான குடியிருப்பாளர்களுக்கு RM200 மதிப்புள்ள ஷோப்பிங் வவுச்சர்கள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமது ஃபஹ்மி நகா தெரிவித்தார்.

"இந்த நன்கொடை ஐடில்பித்ரிக்கு தயாராகும் பெறுநரின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஐடில்பித்ரி கொண்டாடட்டத்தை முன்னிட்டு 36,350 வவுச்சர்களை மாநில அரசு வழங்கியது. அந்தத் தொகை RM12 மில்லியன் மொத்த ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகும்.

இதற்கிடையில், மத விவகார ஆட்சிக்க்குழு உறுப்பினராகவும் இருக்கும் டாக்டர் ஃபஹ்மி, மீதமுள்ள RM100,000 ஶ்ரீ செத்தியாவில் உள்ள 10 மசூதிகள் மற்றும் 20 சூராவ்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.