SELANGOR

சிலாங்கூர் அரசின் இந்திய மாணவர் உயர்கல்வி நிதியுதவி – இன்று இறுதி நாள்

14 மார்ச் 2025, 7:48 AM
சிலாங்கூர் அரசின் இந்திய மாணவர் உயர்கல்வி நிதியுதவி – இன்று இறுதி நாள்

ஷா ஆலம், மார்ச் 14- குறைந்த வருமானம் பெறும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான உயர்கல்விக்கூட நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்ய  இன்றே இறுதி நாள் ஆகும்.

மாநில  அரசின் ஏற்பாட்டிலான இந்த நிதியுதவித் திட்டத்திற்கு இம்மாதம் 3ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்கும்படி அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களை மாநில  அரசு  முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம் 3,000 வெள்ளியும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கூடிய பட்சம்

2,000 வெள்ளியும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்த கல்விக் கட்டணம் ஒரு மாணவருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அந்த உதவித் தொகை  இம்முறை  சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக வழங்கப்படும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அல்லது தனியார் உயர் கல்விக்கூடங்களில் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டில் பட்டப்படிப்பையும்  முதலாம் ஆண்டில் டிப்ளோமா படிப்பையும் மேற்கொள்ளும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள்  சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது  பத்தாண்டுகளுக்கும் மேல் இம்மாநிலத்தில்  வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிதிக்கு  விண்ணப்பம் செய்யலாம்.

https://ls.selangor.my/Cefq3l என்ற  இணைப்பின் மூலம் விண்ணப்பப் பாரத்தை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது  ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அலுவலகத்தில் பாரங்களை  நேரில் பெற்றுக் கொள்ளலாம். 03-55447307 என்ற தொலைப்பேசி எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.