SELANGOR

`MySave Food@Ramadan Bazaar` திட்டத்தின் மூலம் உணவு சேகரிப்பு

4 மார்ச் 2025, 6:20 AM
`MySave Food@Ramadan Bazaar` திட்டத்தின் மூலம் உணவு சேகரிப்பு

ஷா ஆலம், மார்ச் 4: உணவு வீணாவதைத் தடுக்கவும், தேவைப்படுவோருக்கு உதவவும் `MySave Food@Ramadan Bazaar` திட்டத்தை ஷா ஆலம் மாநகராட்சி தொடர்கிறது.

ஐந்தாவது தொடரில் நுழைந்துள்ள இந்த திட்டம் மார்ச் 4 முதல் 20 வரை 14 நாட்களுக்கு நீடிக்கும் என்று ஷா ஆலம் மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

"பஜாரில் உணவு வீணாவதைத் தடுப்பதற்காக மட்டுமல்லாமல், குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளைக் குறைப்பதற்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் ஷா ஆலம் மாநகராட்சி இந்த திட்டத்தை தொடர்ந்து ஏற்பாடு செய்துள்ளது.

"சேகரிக்கப்படும் அனைத்து உணவுகளும் மசூதிகள், சூராவ்கள், குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மாணவர் தங்குமிடங்கள் போன்ற இடங்களில் விநியோகிக்கப்படுகின்றன," என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இந்த திட்டத்திற்கு GEMA மலேசியா இளைஞர், UiTM தன்னார்வ படையணி மற்றும் உயர்கல்வித் துறை உட்பட 600க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உதவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

`MySave Food@Ramadan Bazar` திட்டம் 2020 ஆம் ஆண்டு ஷா ஆலம் மாநகராட்சியால் ரமலான் பஜாரில் விற்கப்படாத உபரி உணவை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, மூன்று ரமலான் பஜாரில் இந்த திட்டத்தின் மூலம் 7,000 கிலோகிராம்களுக்கு மேல் உணவுகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டு 17 இடங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

பஜார் வர்த்தகர்கள் விற்கப்படாத உபரி உணவை MBSA MySave Food கூடாரத்திற்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.