SELANGOR

யாயாசான் சிலாங்கூர் சி.இ.ஓ.பதவிக்கு ராஜா நஸ்ரின் ஷா நியமனம்

4 மார்ச் 2025, 5:23 AM
யாயாசான் சிலாங்கூர் சி.இ.ஓ.பதவிக்கு ராஜா நஸ்ரின் ஷா நியமனம்

ஷா ஆலம், மார்ச் 4 - யாயாசான் சிலாங்கூர் அறவாரியத்தின்  புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சி இ.ஓ.) ராஜா நஸ்ரின் ஷா ராஜா முகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

சொத்துடைமை  மற்றும் வர்த்தகத் துறைகளில் அவருக்கு உள்ள  விரிவான அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தை வியூக இலக்கை நோக்கி வழிநடத்துவதற்கு  மிகவும் பொருத்தமானவராக அவர் விளங்குகிறார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சொத்து மேலாண்மைத் துறையில்  பட்டமும், மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளதோடு ஜப்பானில் உள்ள ககாவா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் நிர்வாகப் படிப்பையும் ராஜா நஸ்ரின் தொடர்ந்துள்ளதாகவும் யாயாசான் சிலாங்கூர் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

அவர் எம்.ஆர்.சி.பி.பெர்ஹாட்டின் துணை நிறுவனமான எம்.ஆர்.சி.பி. சென்ட்ரல் பிரொபர்டீஸ் சென். பெர்ஹாட்  நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மூத்த பொது நிர்வாகியாக அவர் பணியாற்றினார். அப்போது அவர் கே.எல். சென்ட்ரல் மேம்பாட்டுத் திட்டத்திற்கான விற்பனை, சந்தை மற்றும் சொத்து மேலாண்மையின் திட்டமிடல், செயலாக்கம் மற்றும் மேலாண்மைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

பின்னர் அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பெருநிறுவன  நடவடிக்கைகளில்   பணியாற்றினார். பி.என்.பி. கமர்சியல் நிறுவனத்தில்   தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்.  அங்கு சொத்து மற்றும் சொத்து மதிப்புகளை அதிகரிப்பதற்கான சொத்து மேம்பாட்டு முயற்சி, உத்தி உட்பட உயர்மட்ட திட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கூடுதலாக, அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பி.என.பி. மெர்டேக்கா வென்ச்சர் நிறுவனத்தில்  துணைத் தலைவராகவும் வணிகத் தலைவராகவும் பணியாற்றினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.