SELANGOR

ஐடில்ஃபித்ரிக்கு RM200 மதிப்புள்ள 36,350 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள்

3 மார்ச் 2025, 5:46 AM
ஐடில்ஃபித்ரிக்கு RM200 மதிப்புள்ள 36,350 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள்

உலு சிலாங்கூர், மார்ச் 3: இந்த மாத இறுதியில் கொண்டாடப்படும் ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு RM200 மதிப்புள்ள மொத்தம் 36,350 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும்.

இந்த விநியோகம் 56 தொகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் கொண்டவர்பளை இலக்காகக் கொண்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு RM7.2 மில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"இன்று முதல் விண்ணப்பங்கள் திறந்திருக்கும். மேலும், அவை தொகுதி சேவை மையத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

"பெறுநர்கள் ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்திற்கு உபகரணங்களை வாங்க உதவும் வகையில், வவுச்சர்கள் முன்னதாக வழங்கப்படும்," என்று வி. பாப்பாராய்டு கூறினார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஜோம் ஷோப்பிங் வவுச்சர் விநியோக திட்டத்திற்கு மாநிலம் RM12 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

கடந்த ஜனவரியில், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நிர்வாகம் RM4.78 மில்லியன் நிதியை உள்ளடக்கிய 23,900 வவுச்சர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.