SELANGOR

நோன்பு மாதத்தில் மாநில அரசு ஊழியர்கள் 30 நிமிடம் முன்கூட்டியே வீடு செல்ல முடியும்

28 பிப்ரவரி 2025, 9:07 AM
நோன்பு மாதத்தில் மாநில அரசு ஊழியர்கள் 30 நிமிடம் முன்கூட்டியே வீடு செல்ல முடியும்

ஷா ஆலம், பிப்.  28- சிலாங்கூர் அரசு ஊழியர்கள் ரமலான் மாதத்தில் நெகிழ்வான வேலை நேரம் (டபள்யு.பி.எஃப்.)   அரை மணி நேரம் முன்னதாகவே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்று மாநில அரசு  செயலாளர் தெரிவித்தார்.

மனிதவள சேவைகள் சுற்றறிக்கையின்படி  மத்திய அரசு நிறுவனங்களில்  டபள்யு.பி.எஃப். முறையை செயல்படுத்துவதன் மூலம்  அக்காலகட்டத்தில் இடைவேளை நேரம் குறைக்கப்படுகின்றன என்று டத்தோ டாக்டர் அகமது ஃபாட்ஸ்லி அகமது தாஜுடின் தெரிவித்தார்.

இந்த நிர்வாகத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு  இடைவேளை நேரத்தை 30 நிமிடம் குறைப்பதன் மூலம் மாநில அரசு நெகிழ்வுத்தன்மையை அமல்படுத்துகிறது.

இதன்வழி அவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியும் என அவர் சொன்னார்.

இந்தச் நடவடிக்கை  அவர்களின் நலனைக் கவனிப்பதற்கான ஒரு படியாகும். இதன் மூலம் அவர்கள் நோன்பு காலம் முழுவதும் தங்கள் கடமைகளை மிகவும் வசதியாகவும் சமநிலையுடனும் செய்ய முடியும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், மக்கள் சம்பந்தப்பட்ட பணிகள்  எந்த மாற்றங்கள் அல்லது இடையூறுகள் இல்லாமல் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக முகப்பிட செயல்பாட்டு நேரம் வழக்கம் போல் இருக்கும் என்று டாக்டர் அகமது  ஃபாட்ஸ்லி கூறினார்.

மக்களுக்கான சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப செயல்திறனில் சமரசம் செய்யாமல் அரசு ஊழியர்களின் நல்வாழ்வு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.