SELANGOR

ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை ஏப்ரல் மாதம் தொடங்கும்

28 பிப்ரவரி 2025, 5:30 AM
ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை ஏப்ரல் மாதம் தொடங்கும்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், பிப். 28- மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையை மாநில அரசு இவ்வாண்டும் தொடரவிருக்கிறது.

இந்த ஜெலாஜா ஜோப்கேர் திட்டத்தின் கீழ் கடந்தாண்டு மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையின் வாயிலாக சேவை, தயாரிப்பு, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரணை, போக்குவரத்து, உணவு மற்றும் பானத் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இந்த ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தவிருக்கிறோம் என்றார் அவர்.

ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தை நடைபெறும் இடங்கள் பின்வருமாறு-

  • 19 ஏப்ரல் - கோம்பாக் (டேவான் ஸ்ரீ சியாந்தான் கோம்பாக்)
  • 24 மே – பெட்டாலிங் (பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற சமூக மண்டபம்
  • 21 ஜூன் –கோல லங்காட் (டேவான் ஸ்ரீ ஜூக்ரா)
  • 05 ஜூலை - உலு சிலாங்கூர் (டேவான் மெர்டேக்கா கோல குபு பாரு)
  • 19 ஜூலை - உலு லங்காட் (அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக மண்டபம்)
  • 27 ஜூலை - கிள்ளான் (டேவான் ஹம்சா)
  • 09 ஆகஸ்ட் - கோல சிலாங்கூர் (புஞ்சா ஆலம் எம்.பி.கே.எஸ். மண்டபம்)
  • 11 அக்டோபர் - சபாக் பெர்ணம் (டேவான் துன் ரசாக்)
  • 15 நவம்பர் - சிப்பாங் (டேவான் கம்யூனிட்டி பி.பி.எஸ்.டி.)

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.