ஷா ஆலம், பிப். 19 - சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுக்கான (சுக்மா) சின்னத்தை உருவாக்கும் போட்டியில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த போட்டியின் பிரதான வெற்றியாளருக்கு 5,000 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு 2,000 வெள்ளியும் மூன்றாம் இடம் பெறுவோருக்கு 1,000 வெள்ளியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
மேலும், இரண்டு வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 500 வெள்ளி வழங்கப்படும் என்று சுக்மா சிலாங்கூர் 2026 செயலகம் தெரிவித்தது.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப முடியும் என்பதோடு சிலாங்கூரின் அடையாளத்தை பிரதிபலிக்கக்கூடிய மதிப்புக் கூறுகளை படைப்புகள் உள்ளடக்கியிருக்க என இந்த சின்னம் வரையும் போட்டி தொடர்பில் வெளியிடப்பட்ட போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் selangor2026@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் .


