SELANGOR

ஐந்து இடங்களில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

17 பிப்ரவரி 2025, 1:41 AM
ஐந்து இடங்களில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
ஐந்து இடங்களில் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், பிப் 16 - சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.

அத்தியாவசிய சமையல் பொருள்களை மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த ரஹ்மா விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை பலாக்கோங், காஜாங், பந்திங், கோம்பாக் செத்தியா, தஞ்சோங் சிப்பாட் ஆகிய இடங்களில் நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும்,  ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50), சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும் குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.