SELANGOR

கிள்ளான் ஹீமோடையாலிசிஸ் மையத்திற்கு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை

4 பிப்ரவரி 2025, 9:44 AM
கிள்ளான் ஹீமோடையாலிசிஸ் மையத்திற்கு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை
கிள்ளான் ஹீமோடையாலிசிஸ் மையத்திற்கு சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வருகை

ஷா ஆலம், பிப் 4: சீனப் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 70 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கிள்ளான் ஹீமோடையாலிசிஸ் மையத்திற்குப் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் வருகை புரிந்தார்.

அவர் நோயாளிகளுக்கு ஆங்பாவ் மற்றும் மாண்டரின் ஆரஞ்சு பழங்களை வழங்கி நலம் விசாரித்தார். இந்த பயணம் நோயாளிகளுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு தினசரி சிகிச்சையை மேற்கொள்வதில் அவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த வருகையை ஏற்பாடு செய்ததற்காக கிள்ளான் ஹீமோடையாலிசிஸ் மைய தலைவரான ஹெங் கீ இங் அவர்களுக்கு ஜமாலியா நன்றியை தெரிவித்தார். சமூகத்திற்கு சேவைகளை வழங்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.