கிள்ளான், பிப் 4: கிள்ளான் மாநகராட்சியுடன் (எம்பிடிகே) இணைந்து தணிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது உட்பட, அப்பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதில் பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர், கவனம் செலுத்துகின்றார்.
இந்த திட்டம் பெர்க்லி ரெளட்டபோட், தாமான் சியா ஹோங் மற்றும் பண்டார் புக்கிட் ராஜா போன்ற முக்கியமான பகுதிகளில் நீர்ப்பிடிப்பு குளங்களை அமைத்தல் மற்றும் பள்ளங்களை ஆழப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் உள்ளடக்கியதாக டாக்டர் குவா பெர்ங் ஃபெய் விளக்கினார்.
"எம்பிடிகே மூலம் நீர்ப்பிடிப்புக் குளம் அமைக்கும் பணி பெர்க்லி ரெளட்டபோட்டில் நிறைவடைந்துள்ளது. அதே சமயம் தாமான் சியா ஹோங்கில் கட்டுமானப் பணிகள் 40 சதவீதத்தை எட்டியுள்ளன, இது ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"எம்.பி.டி.கே., சைம் டார்பியுடன் இணைந்து, பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள வடிகாலை ஆழப்படுத்தி, நீரை எடுத்துச் செல்லக்கூடிய அமைப்பை நிறுவுவது," என்று அவர் கூறினார்.
தனது சேவை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் இத்திட்டம் சுமூகமாக செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், குடியிருப்பாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
அதே நேரத்தில், பொதுமக்களிடம் பொறுமையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார், ஏனெனில், தணிப்பு திட்டம் நிறைவடைய நீண்ட கால அவகாசம் தேவை. மேலும் அதிக செலவுகளை உள்ளடக்கியது மற்றும் டெண்டர் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றார்.


