ஷா ஆலம், பிப் 2: முதியோர் நட்பு திட்டம் (SMUE) மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு (SMIS) வழங்கும் RM150 வவுச்சர்களை திட்டங்களை மாநில அரசு நாளை முதல் செயல்படுத்தும்.
சமூக நலனுக்கான எக்ஸ்கோ அன்பால் சாரி, 2024 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் மெஸ்ரா ஊசிய இமாஸ் திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய ஒப்புதல் பெற்ற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (பி. டபிள்யூ. டி) வவுச்சர்கள் வழங்கப்படும் என்று கூறினார்.
"இலக்கு குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளுக்கு தற்போதுள்ள முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக புதிய பதிவுகள் தற்காலிகமாக மூடப்படுகிறது".
"இந்த ஆண்டு தொடங்கி, உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்கும் இடத்தின்படி மாநில சட்டமன்ற (டியுஎன்) சமூக சேவை மையத்தில் உரிமைகோரல்களை செய்யலாம்" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஒவ்வொரு உறுப்பினரும் வவுச்சர் கோரப்பட்ட தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மாநில அரசு விதித்துள்ளதாக அன்ஃபால் தெரிவித்தார்.
நான்கு கட்டங்களை உள்ளடக்கிய உறுப்பினர்களின் பிறந்த மாதத்தின் படி வவுச்சர் உரிமைகோரல்கள் செய்யப்பட வேண்டும் என்று அன்ஃபால் மேலும் கூறினார், அதாவது
கட்டம் 1: ஜனவரி முதல் மார்ச் வரை பிறந்த உறுப்பினர்கள்
கட்டம் 2: ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் பிறந்த உறுப்பினர்கள்
உரிமைகோரல் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையும்
கட்டம் 3: ஜூலை முதல் செப்டம்பர் வரை பிறந்த உறுப்பினர்கள்
கட்டம் 4: அக்டோபர் முதல் டிசம்பர் வரை பிறந்த உறுப்பினர்கள்
உரிமைகோரல் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மட்டுமே என்பதால்
குறிப்பிட்ட காலத்தில் கூப்பன்களை பெற்று பயன்படுத்தும்படி அவர் சொன்னார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு (பி. டபிள்யூ. டி) முன்னுரிமை வழங்கும் இத்திட்டத்தில் வவுச்சர்கள் வழங்க சிலாங்கூர் 2025 வரவு செலவுத் திட்டத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த RM20 மில்லியனை ஒதுக்கியது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட முதியோருக்கான மரண சகாய நிதி உதவி 2021 இல் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார்.








