சிபு, ஜன. 31- குடும்ப உறுப்பினர்கள் மூவர் பயணித்த நான்கு சக்கர இயக்க
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததில் அதில்
பயணித்த பதின்ம வயது ஆடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்துயரச் சம்பவம் சிபு-பிந்துலு சாலையின் 130வது கிலோ மீட்டரில்
நேற்று நிகழ்ந்தாக முக்கா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
முகமது ரிசால் அலியாஸ் கூறினார்.
கட்டுப்பாட்டை இழந்த அந்த நான்கு சக்கர இயக்க வாகனம் கால்வாயில்
விழுந்ததைத் தொடர்ந்து அதில் பயணித்த முகமது ஷியாக்கிருள் ஃபாகே
முகமது ஜம்ரி (வயது 16) என்ற இளைஞர் நீரில் மூழ்கி இறந்ததாக அவர்
தெரிவித்தார்.
காலை மணி 10.00 அளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு வாகனங்கள்
சம்பந்தப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த டோயோட்டா
ஹைலக்ஸ் வாகனம் பிந்துலுவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்தது.
சம்பவ இடத்தை அடைந்த போது சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த டோயோட்ட அவான்சா ரக வாகனத்தை மோதிய அந்த
நான்கு சக்கர இயக்க வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில்
விழுந்த து என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
இந்த விபத்து நேரான சாலையில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், சம்பவம்
நிகழ்ந்த போது மழையின் காரணமாக சாலை ஈரமாக இருந்தது என்றார்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து
சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக
அவர் குறிப்பிட்டார்.


