SELANGOR

மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை ஞாயிறன்று மீண்டும் தொடங்கும்

31 ஜனவரி 2025, 1:42 AM
மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை ஞாயிறன்று மீண்டும் தொடங்கும்

ஷா ஆலம், ஜன. 31- சீனப் புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக

நிறுத்தப்பட்டிருந்த சிலாங்கூர் மாநில அரசின் ஏஹ்சான் ரஹ்மா மலிவு

விற்பனை வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)

ஏற்பட்டிலான இந்த மலிவு விற்பனை சீனப்புத்தாண்டு விடுமுறை மற்றும்

விற்பனை பொருள் கையிருப்பை தயார் செய்வது ஆகிய

நோக்கங்களுக்காக கடந்த 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி

கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ

சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50),

சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும்

குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக்

வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை

ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்

எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில

அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் பத்து ஏஹ்சான் மார்ட் பல்பொருள்

கடைகளைத் திறக்க பி.கே.பி.எஸ். திட்டமிட்டுள்ளது. தற்போது சுங்கை

துவா மற்றும் பண்டான் இண்டா ஆகிய இடங்களில் இந்த கடைகள் திறக்கப்பட்டுள்ள வேளையில் உலு கிளாங்கில் இதன் கிளை விரைவில் திறக்கப்படவுள்ளது.

பி.கே.பி.எஸ். ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த கடைகளில் அத்தியாவசியப்

பொருள்கள் சந்தைதைய விட 10 முதல் 15 விழுக்காடு குறைந்த

விலையில் விற்கப்படுகின்றன. ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனைத்

திட்டத்தை தரம் உயர்த்தும் முயற்சியாக இந்த ஏஹ்சான் மார்ட்

கடைகளை மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும்

திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை

பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள

கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது

http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து

கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.