ஷா ஆலம், ஜன 9: ஜனவரி 20 முதல் 28 வரை சீனப் புத்தாண்டை முன்னிட்டு இலவச மொத்த குப்பை அகற்றும் சேவையை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்கும்.
KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) வழங்கும் இச்சேவைக்கு தரை வீட்டில் வசிப்பவர்கஅல மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று பிபிடி தெரிவித்துள்ளது.
இதில் மெத்தைகள் மற்றும் பழைய தளவாட பொருட்கள் மட்டுமே அடங்கும். வீட்டை சீரமைக்கும் போது பயன்படுத்தி பொருட்கள், வீடு மாறும் போது அகற்றும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படாது.
இத்திட்டத்திற்கு 011-3538 4437 அல்லது 03-8081 4437 என்ற வாட்சாப் KDEBWM வழியாக 13 முதல் 21 ஜனவரி 2025 வரை விண்ணப்பிக்கலாம்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.


