SELANGOR

குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய தவறிய கடைக்கு அபராதம்

9 ஜனவரி 2025, 7:07 AM
குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய தவறிய கடைக்கு அபராதம்

ஷா ஆலம், ஜன 9: குப்பைத் தொட்டிகளை ஏற்பாடு செய்ய தவறியதற்காக ஜாலான் மேடன் 10 இல் உள்ள கடை ஒன்றுக்கு இரண்டு அபராதங்களை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி வெளியிட்டது.

கடையின் உரிமையாளர் கழிவு அகற்றும் நடவடிக்கையை முறையாக செய்ய தவறியதாக சோதனை நடவடிக்கையில் கண்டறியப்பட்டது என பிபிடி முகநூலில் தெரிவித்துள்ளது.

" சட்டம் (UUK) 4 UUKPS MBPJ 2007 மற்றும் UUK6 UUKPS MBPJ 2007 ஆகியவற்றின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் கடைகள் நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பராமரிக்கப் படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எப்போதும் இணங்குமாறு எம்பிபிஜே அறிவுறுத்துகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.