ஷா ஆலம், டிச 26: எதிர்வரும் ஜனவரி 4 ஆம் தேதி கோலா சிலாங்கூரில் உள்ள பந்தாய் ரெமிஸ், ஜெராம் நகரில் நடைபெறும் சிலாங்கூர் மடாணி இளைஞர் கார்னிவலின் தொடர் மூன்றில் வருகையாளர்களுக்காகப் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் காத்திருக்கின்றன
RM4,600க்கும் அதிகமான ரொக்கப் பரிசுகளை வழங்கும் மீன்பிடி போட்டி மற்றும் கரோக்ககே உள்ளிட்ட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என இளைஞர் ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
இதில் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கிறோம், பங்கேற்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்" என்று அவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிர்ஷ்ட குலுக்கு, ஏஹ்சான் ரஹ்மா விற்பனை (JER) மற்றும் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) கண்காட்சி போன்ற பிற நிகழ்வுகளும் நடைபெறும் என நஜ்வான் தெரிவித்தார்.


