ஷா ஆலம், டிச. 26- இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும்
நோக்கிலும் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாகவும் ஜனரஞ்சக
நிகழ்வுகளுடன் கூடிய கொண்டாட்ட நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங்
சட்டமன்றத் தொகுதி ஏற்பாடு செய்துள்ளது.
தேநீர் விருந்துடன் கூடிய இந்த நிகழ்வு இங்குள்ள புக்கிட் ரீமாவ், ஜாலான்
கெமுனிங் டாமாய் 32/151, டேவான் எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டரில் வரும்
ஜனவரி 1ஆம் தேதி மாலை 3.00 மணி தொடங்கி 6.30 மணி வரை
நடைபெறும்.
ஷா ஆலம், கிறிஸ்டியன் ஃபெல்லாஷிப் (எஸ்.ஏ.சி.எஃப்.) அமைப்புடன்
இணைந்து நடத்தப்படும் இந்த கொண்டாட்டத்தில் விருந்தினர்களை
மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகப் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தொகுதி மக்கள் திரளாக க் கலந்து சிறப்பிக்குமாறு
கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன்
கேட்டுக் கொள்கிறார்.


