SELANGOR

இன்ஃப்ராசெல் நான்கு மாவட்டங்களில் சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது

18 டிசம்பர் 2024, 6:56 AM
இன்ஃப்ராசெல் நான்கு மாவட்டங்களில் சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது

ஷா ஆலம், டிச.18: டிசம்பர் 17 முதல் இன்று வரை மாநில சாலை பராமரிப்பு நிறுவனமான இன்ஃப்ராசெல் நான்கு மாவட்டங்களில் சாலை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது.

கிள்ளான், ஷா ஆலம், பந்திங் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இன்ஃப்ராசெல் தெரிவித்துள்ளது.

"கிள்ளான் மாவட்டத்தில் ஜாலான் தெலோக் கோங், ஜாலான் கம்போங் லோம்போங், ஜாலான் ஹாஜி இமாம் மற்றும் ஜாலான் பெர்சியாரன் சுங்கை பினாங் ஆகிய நான்கு சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

"ஷா ஆலமில் ஜாலான் புக்கிட் படாக், கம்போங் மெலாயு சுபாங், ஜாலான் கோமுட்டர் பத்து தீகா, ஜாலான் பெர்சியாரன் ஜூப்லி பேராக், பந்திங்கில் ஜாலான் உத்தாமா ஶ்ரீ செடிங் மற்றும் சபாக் பெர்ணமில் ஜாலான் பரிட் 1 ஆகிய இடங்களிலும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக" X இணையதளம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

X பக்கத்தில் #INFRASEL #NamaJalan #Daerah இல் ட்வீட்களைப் பதிவேற்றுவதன் மூலம் தொடர்ந்து புகார்களை அளிக்க மக்களை இன்ஃப்ராசெல் ஊக்குவிக்கிறது.

முன்னதாக, மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த மொத்தம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் அசிம் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.