ஷா ஆலம், டிச 18: அம்பாங் ஜெயா நகராண்மை கழக நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 1,432 வணிக வளாகங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான வணிக உரிமங்களை புதுப்பித்துள்ளன.
அந்த எண்ணிக்கையில் 1,301 வணிக வளாகங்கள் iCOMM அமைப்பு மூலம் RM1.21 மில்லியன் வருவாய் வசூலுடன் தங்கள் உரிமங்களை புதுப்பித்துள்ளன என அறிக்கை ஒன்றின் மூலம் எம்பிஏஜே தெரிவித்தது.
இதற்கிடையில், மொத்தம் 131 வணிக வளாகங்கள் மற்றும் 1,131 வியாபாரிகள் எம்பிஏஜே கவுண்டரில் RM451,383.96 வருவாய் வசூலுடன் தங்கள் உரிமங்களை புதுப்பித்தனர்.
"எம்பிஏஜே வணிக உரிமம் வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்கு முன் அதை புதுபிக்க தவறினால் RM360 அபராதம் விதிக்கப்படும். ஆகவே, அதை தவிர்ப்பதற்காக தங்கள் உரிமங்களைப் புதுப்பிக்க நினைவூட்டப்படுகிறார்கள்.
"கூடுதல் தகவலுக்கு, அக்டோபர் 1 முதல் எம்பிஏஜே வணிக உரிமம் புதுப்பித்தல் கவுண்டர் 2025 கேலரி நிலை 4, மெனாரா எம்பிஏஜேயில் திறக்கப்பட்டுள்ளது மற்றும் ஒவ்வொரு நாளும் (சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது," என்று தெரிவிக்கப்பட்டது.


