SELANGOR

கிள்ளான் நூலகம் உள்ளாட்சி நிர்வாகத்தின் 134 ஆண்டு கால வரலாற்றைக் காட்டும் பாரம்பரிய கேலரியாக மேம்படுத்தப்படும்

12 டிசம்பர் 2024, 9:32 AM
கிள்ளான் நூலகம் உள்ளாட்சி நிர்வாகத்தின் 134 ஆண்டு கால வரலாற்றைக் காட்டும் பாரம்பரிய கேலரியாக மேம்படுத்தப்படும்

கிள்ளான், டிச 12: அடுத்த ஆண்டு கிள்ளான் மாநகராட்சி தனது நூலகத்தை உள்ளாட்சி நிர்வாகத்தின் 134 ஆண்டு கால வரலாற்றைக் காட்டவும் பாரம்பரிய கேலரியாக மேம்படுத்தும்.

அம்மையத்தை மறுவடிவமைக்கவும், புத்துயிர் கொடுக்கவும் 500,000 ரிங்கிட் ஒதுக்கப் பட்டுள்ளதாக டத்தோ பண்டார் கிள்ளான் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.

இந்த கேலரியில் கிள்ளான் மாநிலத்தின் கடந்த காலத்திலிருந்து இன்று வரை உள்ள பழைய புகைப்படங்கள், முத்திரைகள், மேயரின் ஆடைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு கலைப்பொருட்கள் இடம் பெறும் என்று அவர் விளக்கினார்.

அடுத்த ஆண்டு மத்தியில் மேம்பாடு பணி துவங்கி, 2025ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,''என்றார்.

இந்த கேலரி மாணவர்களின் ஆய்வு மையமாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தளமாகவும் அமையும் என்றும் கூறினார்.

"வரலாறு பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதால் பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு குறிப்பு மையமாக இருக்கும். கிள்ளான் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் இது ஈர்க்கும் என்று நம்புகிறேன்," என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.