சுபாங் ஜெயா, டிச 10: விரைவான வளர்ச்சி மற்றும் நிலைத் தன்மைக்கு இடையே சமநிலையை அடைய சிலாங்கூர் சுற்றுச்சூழல், சமூக நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
"எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக தூய்மையான சூழலை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி நிலையான வளர்ச்சிகான முயற்சிகளை முன்னெடுப்பதில் சிலாங்கூர் உறுதிபூண்டுள்ளது என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
"இந்த இலக்கை அடைய, கார்பனை குறைக்கவும், நிலையான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும், நிலையான கழிவு மேலாண்மையை நடைமுறைப்படுத்தவும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை" என்று அவர் கூறினார்.
முதல் சிலாங்கூர் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி 2025 ஆம் ஆண்டுக்குள் கிரீன் ஹவுஸ் வாயு வெளியேற்றத்தை 35 சதவீதம் குறைக்கும் இலக்குடன் 12வது மலேசியா திட்டத்தை அரசு ஆதரித்ததாக அவர் கூறினார்.
24 மணி நேரமும் சுத்தமான தண்ணீரை வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் 15 சதவீத கழிவு மறுசுழற்சி விகிதத்தை அடைவது உள்ளிட்ட பிற முயற்சிகளையும் ஜமாலியா கூறினார்.
"மூலோபாய திட்டமிடல், முதலீட்டு வசதி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், மாநிலத்தை வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மையமாக நிலைநிறுத்த எம்பிஐ விரும்புகிறது," என்று அவர் கூறினார்.
மாநிலம் முழுவதும் பசுமை முயற்சிகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை உருவாக்க சிலாங்கூர் காலநிலை மாற்ற தழுவல் மையத்தை நிறுவுவதில் எம்பிஐ முக்கிய பங்கு வகித்ததாகவும் ஜமாலியா கூறினார்.


