SELANGOR

ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை  சனிக்கிழமை சபாக் பெர்ணமில் நடைபெறும்

10 டிசம்பர் 2024, 8:10 AM
ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை  சனிக்கிழமை சபாக் பெர்ணமில் நடைபெறும்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், டிச. 10 - சபாக் பெர்ணம் மாவட்ட  நிலையிலான  கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை வரும் டிசம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை சபாக் பெர்ணம்  டேவான் துன் ரசாக் மண்டபத்தில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை மற்றும் அரசு நிறுவனங்களின் கண்காட்சி ஆகிய அங்கங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் டோப் க்ளோவ், கே.பி.ஜே. ஹெல்த்கேர், கேனன், மேரி பிரவுன், யுனைடெட் சாம்பியன் குருப் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

வேலை தேடுவோர் தங்களின் சுயவிபரக் குறிப்பு மற்றும் தேவையான

ஆவணங்களை கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்களின் வருகையை உறுதி செய்வதற்கு ஏதுவாக

https://bit.ly/jobcareSB   என்ற இணைப்பின் வழி விண்ணப்ப  பாரத்தை பூர்த்தி செய்யும் படி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்    கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களை இலக்காகக் கொண்டு இந்த  கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையை மாநில அரசின்  சிலாங்கூர் தொழிலாளர் திறன் மேம்பாட்டு பிரிவு (யு.பி.பி.எஸ்.) நடத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை எட்டு மாவட்டங்களில் இந்த வேலை வாய்ப்புச் சந்தை நடத்தப்பட்ட வேளையில் சபாக் பெர்ணம் நகரில் நடைபெறும் இச்சந்தை   இவ்வாண்டிற்கான இறுதி நிகழ்வாக விளங்குகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.