SELANGOR

இந்த மாதம் முழுவதும் RM1 ஊக்கத்தொகை வழங்கும் மீன்பிடி திட்டம் தொடரும்

10 டிசம்பர் 2024, 7:49 AM
இந்த மாதம் முழுவதும் RM1 ஊக்கத்தொகை வழங்கும் மீன்பிடி திட்டம் தொடரும்

ஷா ஆலம், டிச 10: ஒரு கிலோவுக்கு RM1 ஊக்கத்தொகை வழங்கும் மீன்பிடி திட்டம் (ப்ளேகோ) இந்த மாதம் முழுவதும் தொடரும் என்று வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கி ஶ்ரீ கெம்பாங்கான் அருகில் உள்ள சுங்கை குயோவில் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் என இஷாம் அசிம் கூறினார்.

"நமது நதி நீர் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் வெளிநாட்டு மீன்களால் கெடாமல் பாதுகாக்க மாநில அரசின் முயற்சி இது" என்று அவர் முக நூலில் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பரில், உள்ளூர் இன மீன்கள் மற்றும் நதியைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக சுங்கை லங்காட்டில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதில் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் 4,467 கிலோகிராம் மீன்கள் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.