SELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டிலான தெக்குன் கடனுதவித் திட்ட விளக்கமளிப்பில் 180 பேர் பங்கேற்பு

9 டிசம்பர் 2024, 6:48 AM
செந்தோசா தொகுதி ஏற்பாட்டிலான தெக்குன் கடனுதவித் திட்ட விளக்கமளிப்பில் 180 பேர் பங்கேற்பு
செந்தோசா தொகுதி ஏற்பாட்டிலான தெக்குன் கடனுதவித் திட்ட விளக்கமளிப்பில் 180 பேர் பங்கேற்பு

(ஆர்.ராஜா)

கிள்ளான், டிச. 9- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில்

இங்குள்ள செந்தோசா எம்.பி.டி.கே. மண்டபத்தில் நேற்று நடைபெற்ற

ஸ்பூமி தெக்குன் வர்த்தக கடனுதவி விளக்கக் கூட்டத்தில் சுமார் 180 பேர்

கலந்து கொண்டனர்.

கோத்தா ராஜா தொகுதியிலுள்ள இந்திய சிறு வணிகர்களை இலக்காக

கொண்டு நடத்தப்பட்ட இந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்து

கொண்டவர்கள் எண்ணிக்கை மனநிறைவளிக்கும் வகையில் உள்ளதாக

தொகுத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய விரும்பும் சிறு மற்றும்

நடுத்தரத் தொழில்முனைவோருக்கு அரசாங்கம் வழங்கி வரும் வாய்ப்புகள்

குறிப்பாக கடனுதவி குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு

ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என அவர் சொன்னார்.

தெக்குன் நேஷனல் திட்டத்தின் கீழ் வர்த்தக கடனுவி பெறுவதற்கான

வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் அதேவேளையில் தங்கள்

பகுதியில் வர்த்தக சூழியல் முறையை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக

ஒருங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் இந்த

நிகழ்வு வர்த்தகர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள

கோத்தா ராஜா தொகுதியிலுள்ள இந்திய வணிகர்கள் தயாராக இருப்பதை

இந்த நிகழ்வுக்கு கிடைத்த ஆதரவு புலப்படுத்துகிறது. இத்தகை

கடனுதவித் திட்டங்கள் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம்

செய்வதற்கும் உள்நாட்டில் மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் போட்டியிடும் ஆற்றலை பெறுவதற்கு உண்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் ஒன்பது

முன்னெடுப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அவற்றில் 5 கோடி

வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் தெக்குன் கோ பிக் ஸ்பூமி எனும் திட்டம்

இந்திய வணிகர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது எனவும்

அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.