சிப்பாங், டிச. 7- சாலை சமிக்ஞை விளக்கில் நின்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய சம்பவத்தில் உணவு விநியோகிப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பூச்சோங், ஜாலான் தாமான் மாஸ் 3இல் நேற்று நிகழ்ந்தது.
நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 39 வயது பெண் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை சமிக்ஞை விளக்கில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 27 வயது இளைஞரை மோதியதாக நம்பப்படுவதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நோரிசாம் பஹாமன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் போது சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் இருந்ததால் அந்த அந்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இந்த விபத்தின் விளைவாக அநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சிப்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்


