SELANGOR

சிலாங்கூர் மீன்பிடி போட்டியில் RM53,000 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது

3 டிசம்பர் 2024, 8:53 AM
சிலாங்கூர் மீன்பிடி போட்டியில் RM53,000 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது

ஷா ஆலம், டிச 3: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிப்பாங்கில் உள்ள பாகன் லாலாங் கடற்கரையில் நடைபெறும் சிலாங்கூர் மீன்பிடி போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மொத்தம் RM 53,000 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் வக்ஜாலி நிகழ்வு நிர்வாகத்துடன் இணைந்து சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக சிப்பாங் நகராண்மை கழகம்(எம்பிஎஸ்பி)முகநூலில் தெரிவித்துள்ளது

"ஓபன் பிரிவில் வெற்றி பெறுபவருக்கு RM 15,000, இரண்டாம் இடத்திற்கு RM4,000 மற்றும் மூன்றாம் இடத்திற்கு RM2,000 வழங்கப்படும்.

"மேலும்,நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களுக்கு RM500, ஆறாவது முதல் 10வது இடங்களுக்கு RM300 மற்றும் 11வது முதல் 100வது இடங்களுக்கு RM100 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இப்போட்டியில் மின்சாதனப் பொருட்கள் வடிவில் 50 அதிர்ஷ்ட குலுக்கு பரிசுகளும் காத்திருக்கின்றன.

பங்கேற்பு கட்டணம் RM75 மற்றும் மாற்றுதிறனாளிக்கு RM50 ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.