ஷா ஆலம், டிச 3: இல்திசம் அனாக் சிலாங்கூர் திட்டத்திற்கான பதிவை முதல் 1,553 விண்ணப்பதாரர்களுக்கு யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) மீண்டும் திறந்துள்ளது.
இத்திட்டத்திற்கு 2022 முதல் 2024 வரை பிறந்த சிலாங்கூர் குழந்தைகள் https://anas.yawas.com.my/anas.yawas.com.my என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் SSPN பிரைம் சேமிப்புக் கணக்கைத் திறந்து ஐந்து வருட காலத்திற்கு (1 வருடம் RM100) என்ற மதிப்பிலான சேமிப்பைப் பெறுவர்.
"ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை மற்றும் விண்ணப்பதாரர்கள் முழுமையான ஆதார ஆவணங்களை இணைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு, 03-5481 8800 என்ற எண்ணை அழைக்கவும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இல்திசம் அனாக் சிலாங்கூர் என்பது இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் கீழ் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இது 2022 ஆம் ஆண்டு தொடங்கி சிலாங்கூரில் புதிதாகப் பிறந்த 30,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
மாநில அரசு வழங்கும் SSPN பிரைம் சேமிப்புக் கணக்கில் உள்ள சேமிப்புப் பணத்தை, விண்ணப்பதார்கள் 18 வயது மற்றும் அதற்கு மேல் அடையும் போது மட்டுமே திரும்பப் பெற முடியும்


