ஷா ஆலம், டிச 2: யாயாசான் சிலாங்கூர் மூலம் இலவச புத்தக மின்-வவுச்சர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாணவர்களுக்கும் தொழில்துறை பயிற்சி நிதியுதவி வழங்குவதற்கும் சிலாங்கூர் மாநில அரசு RM700,000 நிதியை ஒதுக்கியுள்ளது.இத்திட்டம் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வி காலம் முழுவதும் செலவு
மற்றும் தேவைகளை ஏற்றுக் கொள்வதற்கான சிறந்த வாய்ப்புகளை மாநில மாணவர்களுக்கு வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டது என்று யாயாசான் சிலாங்கூர்
தெரிவித்தது.
"புத்தகத்திற்கான மின்-வவுச்சர்களை வழங்குவது ஒரு நிலையான மாநில கல்விசூழலை உருவாக்குவதற்கான மாநில அரசின் முன் முயற்சியாகும்
.
"இந்த உதவியானது சிலாங்கூர் மாணவர்கள் புத்தகங்கள் வாங்குவதற்கான சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் புத்தகங்களை வாசிப்பதில் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படும்" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
வவுச்சரைப் பெறும் மாணவர்கள், Bookcapital.com.my இணையதளத்தில் ரிடீம்செய்வதோடு
, நவம்பர் 27 அன்று தொடங்கிய சிலாங்கூர் சர்வதேச புத்தகக்கண்காட்சியில் அதை
பயன்படுத்தலாம் என யாயாசான் சிலாங்கூர் தெரிவித்தது.
மேலும், மாநில மாணவர்களுக்கான தொழில்துறை பயிற்சி நிதித் திட்டமான சிலாங்கூர் இன்டர்ன்ஷிப் மாணவர் திட்டத்தை (SISPRO) வழிநடத்தும் பொறுப்பும் யாயாசான் சிலாங்கூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொழில்துறை பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ளும் சிலாங்கூர் மாணவர்களின் நலனைக் கவனிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
சிலாங்கூர் பட்ஜெட் 2024 இல் கல்வி மையத்தின் சாராம்சங்களில் இந்த திட்டமும்ஒன்றாகும
,. இதற்காக RM300,000 ஒதுக்கப்பட்டுள்ளது," என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.


