SELANGOR

சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள்

2 டிசம்பர் 2024, 6:30 AM
சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள்

ஷா ஆலம், டிச 2: வெள்ளத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகளுக்காக சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் (சேர்வ்) குழுவைச் சேர்ந்த சுமார் 100 பேர் கெடா மற்றும் கிளந்தான் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.

உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்வார்கள், ஆனால் வெள்ளம்  தணிந்த பின்னரே அந்நடவடிக்கை தொடங்கும் என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (MSN) நிர்வாக இயக்குனர் கூறினார்.

"ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புவதால் நாங்கள் ஏற்கனவே தயாராக இருக்கிறோம். ஆனால் அது தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது.

"அதே நேரத்தில், உறுப்பினர்களும் சிலாங்கூரில் வெள்ளத்திற்கு தயாராக உள்ளனர். இப்போது வெள்ளப்பெருக்கு நிகழ்வுக்கு கூடுதலாக அடிக்கடி மழை பெய்கிறது," என்று முகமட் நிஜாம் மர்ஜுகியை தொடர்பு கொண்டபோது கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில மாநிலங்களுக்கு தன்னார்வலர்களை தூய்மைப்படுத்தும் பணிக்கு அனுப்புவதன் மூலம் உதவத் தயாராக இருப்பதாக டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

குறிப்பாக கிளந்தான், திரங்கானு மற்றும் கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டாக உதவுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தையும் தனது தரப்பு தொடர்பு கொண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.