SELANGOR

வெள்ளத்தை தவிர்க்க வெள்ளத் தணிப்புத் திட்டம் தேவை

29 நவம்பர் 2024, 8:36 AM
வெள்ளத்தை தவிர்க்க வெள்ளத் தணிப்புத் திட்டம் தேவை

ஷா ஆலம், நவ 29: அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதைத் தவிர்க்க, தங்கள் பகுதியில் வெள்ளத் தணிப்புத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று மேரு மாநில சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இத்திட்டத்திற்கு RM 130 மில்லியன் செலவில் 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இப்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை என மரியம் அப்துல் ரஷீட் கூறினார்.

"நிலம் கையகப்படுத்தும் காரணி போன்ற சில கட்டுப்பாடுகள் உள்ளன, ஏனெனில் இது அரசாங்க நிலம் அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

"அதிகாரப் பிரச்சனை அல்லது எதுவாக இருந்தாலும் தீர்க்கப்பட்டு (வெள்ளத்தடுப்பு) திட்டத்தை உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில் ஒவ்வொரு முறையும் அதிக மழை பெய்யும் போது, வெள்ளம் ஏற்படும்," என்று அவர் கூறினார்.

வெள்ள அபாயம் உள்ள ஜாலான் ஹம்சா அலாங், ஃபேரி பார்க், சுங்கை பிஞ்சாய் மற்றும் சுங்கை பலோங் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளத் தணிப்பு திட்டத்தின் கட்டுமானம் உள்ளடக்கியது.

நேற்று பிற்பகல் முதல் பெய்த கனமழையால் கிள்ளான் பகுதியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

அதைத் தொடர்ந்து, சிலாங்கூரில் இரண்டு தற்காலிக தங்கும் மையங்கள் (பிபிஎஸ்) திறக்கப்பட்டன. அதில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.