ஷா ஆலம், நவ. 29 - பாயா ஜெராஸ் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்கள், எம்பிஐ அறக்கட்டளை மூலம் பண உதவியை பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் RM500 வழங்கப்பட்டது. இந்த உதவி பெறுநர்களின் சுமைகளை குறைக்கும் என்று எம்பிஐ தலைமை செயல் அதிகாரி சாய்போல்யாசன் எம் யூசோப் கூறினார்
"தொகை சிறியதாக இருக்கலாம், ஆனால் இது பெறுநர்களின் சுமையை குறைக்கவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேற் கொள்ளவும் உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
மேலும், வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மூன்று பொது உயர்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விக்கு உதவ, நாங்கள் மடிக்கணினிகளை வழங்கியுள்ளோம்," என்று அவர் கூறினார்
வெள்ள நிவாரண உதவிகள் மற்றும் மடிக்கணினிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் சாய்பொல்யாசன் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு எம்பிஐ அறக்கட்டளை குறிப்பாக RM1 மில்லியனை பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கியுள்ளது. இது தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் மாநில அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.


