ஷா ஆலம்,நவ 28: நிரந்தர வனக் காப்பகங்களாக அரசிதழில் வெளியிட படக்கூடிய அதிகமான நிலங்களை மாநில அரசு கண்டறிந்து வருகிறது.
சிலாங்கூர் மாநிலத்தின் குறைந்தபட்சம் 30 சதவீத நிலத்தை நிரந்தர காடுகளாக பராமரிக்க உறுதி பூண்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
இந்த நடவடிக்கையானது மாநிலத்தின் காடுகளை பராமரிக்கும் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) உத்தியின் ஒரு பகுதியாகும் என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
"தற்போது,சிலாங்கூரில் 250,987.12 ஹெக்டேர் நிரந்தர வன இருப்பு உள்ளது, இது மாநிலத்தின் நிலப்பரப்பில் 31.7 சதவீதம் ஆகும்" என்று நேற்று நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.
நிரந்தர வன இருப்பு சதவீதத்தை பராமரிப்பதில் மாநில அரசின் முயற்சிகள் குறித்த கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஹில்மன் இடாமின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வனப் பகுதியைப் பராமரிக்கும் முயற்சிகளில், பொது விசாரணை விதிகள் (சிலாங்கூர்) 2014-ன் அமலாக்கம், வர்த்தமானியிலிருந்து நீக்கப்பட வேண்டிய பகுதிகள் என்று ஜமாலியா கூறினார்.
நிலத்தை நிரந்தர வனக் காப்பகமாக அரசிதழில் வெளியிடக்கூடிய ஓர் ஆய்வையும் சிலாங்கூர் அரசு நடத்தியது.


