SELANGOR

பத்து தீகா தீபாவளி பொது உபசரிப்பில் 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

26 நவம்பர் 2024, 5:11 AM
பத்து தீகா தீபாவளி பொது உபசரிப்பில் 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பத்து தீகா தீபாவளி பொது உபசரிப்பில் 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பத்து தீகா தீபாவளி பொது உபசரிப்பில் 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், நவ. 26 - பத்து தீகா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில்

இங்குள்ள சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் நேற்று

முன்தினம் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் பல்லினங்களைச்

சேர்ந்த 900க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு சிறப்பு அங்கங்களுடன் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட், ஷா ஆலம்

நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த பொது உபரிப்பில் உரையாற்றிய டேனியல் அல் ரஷிட், இந்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்வில் தொகுதியைச் சேர்ந்த திரளான மக்கள்

கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொகுதியிலுள்ள இந்தியர்களின் நலனுக்கு தாம் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகக் கூறிய அவர், இத்தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்களை

தொடர்ந்து அமல்படுத்துவதில் இந்திய வாக்காளர்களின் ஒத்துழைப்பு

தமக்கு தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வை சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி

மாநாட்டு மையத்தில் நடத்துவதில் பெரிதும் உதவியாக இருந்த பள்ளி

நிர்வாகம் மற்றும் வாரியத்திற்க தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்

அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்தாண்டைக் காட்டிலும் இம்முறை இந்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் அதிகமானோர் கலந்து கொண்டதாக பத்து தீகா

தொகுதி இந்திய சமூகத் தலைவர் பி.சதாசிவம் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டதோடு சிறப்பு அங்கமாக அதிர்ஷக்குலுக்கும் நடத்தப்பட்டது.

மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட 12 வயதுக்கும் குறைவான சுமார் 100

சிறார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அங்பாவ் வழங்கினார்

என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.