SELANGOR

மாநில அரசின் இலவச பல் பரிசோதனைத் திட்டத்தின் வழி 3,867 பேர் பயனடைந்தனர்

21 நவம்பர் 2024, 4:47 AM
மாநில அரசின் இலவச பல் பரிசோதனைத் திட்டத்தின் வழி 3,867 பேர் பயனடைந்தனர்

ஷா ஆலம், நவ. 21- சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவத் திட்டத்தின் கீழ் இவ்வாண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை  மொத்தம் 3,867 பேர்  இலவச பல்  பரிசோதனையில் பங்கு கொண்டு பலனடைந்தனர்.

தடுப்பூசியைத் தவிர இல்திஸாம் சிலாங்கூர் சேஹாட் (ஐ.எஸ்.எஸ்.) திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் அடிப்படை சிகிச்சைகளில் பல் பரிசோதனையும் ஒன்றாகும் என  பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

இந்த  இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம் கடந்த  2022 முதல்  செல்கேர் மேனேஜ்மெண்ட் சென். பெர்ஹாட் நிறுவனத்தால்  நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஐ.எஸ்.எஸ்.  பெறுநரும் பதிவு செய்யப்பட்ட குடும்ப உறுப்பினரும் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள்.

ஐ.எஸ்.எஸ். கீழ் பதிவு செய்யப்பட்ட 21  கிளினிக்குகளில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் 70 வெள்ளி கட்டணம் விதிக்கப்படுகிறது  என்று அவர் கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று பண்டார் பாரு கிள்ளான் உறுப்பினர் டாக்டர்

குவா பெர்ங் ஃபெய் எழுப்பிய கேள்விக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஐ.எஸ்.எஸ். திட்டத்தைத் தொடர  2 கோடி வெள்ளி  ஒதுக்கப்படுவதாக  கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.